கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: சிறையிலிருந்து வெளியே வந்த 5 பேர்..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பேர் தரப்பில் இருந்து விடுத்த கோரிக்கை என்ன?

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: சிறையிலிருந்து வெளியே வந்த 5 பேர்..!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையிலிருந்து ஜாமினில் விடுதலை செய்யபட்டனர். 

5பேர் கைது:


கள்ளக்குறிச்சி  தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஜாமின் கோரி மனுதாக்கல்:


சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 பேரும் ஜாமின் கோரி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதக்கல்:


இதனையடுத்து மீண்டும் 5 பேரும் ஜாமின் கோரி இந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதால் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென கோரியிருந்தனர். 

ஜாமின் வழங்கிய நீதிமன்றம்:


அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 5 பேருக்கும் 26-ம் தேதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. சிறை நடவடிக்கைகளால் காலதாமதாக இன்று அவர்கள் 5 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். 

மேல்முறையீடு:

பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஜாமினை எதிர்த்து மாணவியின் பெற்றோர் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.