கள்ளக்குறிச்சி விவகாரம்: கைது பன்ன அப்பாவிகளுக்கு இழப்பீடு வேண்டும்..! அது யாரு அந்த அப்பாவி?

திங்கள் கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் - நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி விவகாரம்: கைது பன்ன அப்பாவிகளுக்கு இழப்பீடு வேண்டும்..! அது யாரு அந்த அப்பாவி?

மாணவி மரணமும், கலவரமும்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர்  பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இநத வன்முறையில் பள்ளி சூறையாடப்பட்டதுடன் பள்ளியின் பேருந்துகளுக்கு  தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறியது. 

கைது நடவடிக்கை: இது தொடர்பாக  அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை  சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். 

அப்பாவிகளும் கைது: இந்த நிலையில் கலவர வழக்கில்  அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரிக்க வேண்டும்: மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

திங்கட்கிழமை விசாரணை: இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்து  கொள்ளப்படுகிறது.