கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


சென்னை கலாஷேத்ராவின் ருக்மணி கல்லூரியில் 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரசின் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், விசிகவின் எஸ்எஸ் பாலாஜி ஆகியோர் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் இச்சம்பவம் தொடர்பாக 210 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும், இதுவரை காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

இதையும் படிக்க : புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு...தங்கம் தென்னரசுவின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை!

மேலும் விவகாரம் குறித்த தகவல் கிடைத்தவுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும், தற்போது மாணவிகள் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் குழு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும்ம், குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.