கே.சி.பழனிசாமியை நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

Published on

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி  கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரடப்பட்டது. தன் மீது இபிஎஸ் தரப்பு களங்கம் விளைவிப்பதாக கூறி கே.சி.பழனிச்சாமி மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், பொது செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியிலிருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com