ஆட்டோ டிரைவர்களுக்கு ஆர்.டி.ஓ அறிவுரை!

காஞ்சிபுரம் நகரில்அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.

ஆட்டோ டிரைவர்களுக்கு ஆர்.டி.ஓ அறிவுரை!

காஞ்சிபுரம்: நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாக ஆட்டோக்கள் உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிப்பதால் அதனை முறைப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் (ஆர்.டி.ஓ) கா.பன்னீர்செல்வம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகரின் பல்வேறு பகுதிகளில் தீடிர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் 17 ஆட்டோக்கள் விதிகளை மீறி செயல்படுவதை கண்டறிந்து பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள 3 காவல் நிலைய ஆய்வாளர்களும் தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் 53 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புதுபிக்கபட வேண்டிய ஆட்டோக்களை உடனடியாக புதுப்பித்து இயக்க அறிவுறுத்தபட்டனர்.

மேலும், விதிகளை மீறி ஆட்டோ ஓட்டிய ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் (ஆர்.டி.ஓ) கா. பன்னீர்செல்வம், அரசுவிதிகள், உரிமம்கட்டண மீட்டர் பொருத்துதல்நன்னடத்தை விதிகள் ஆகியவற்றை மீறும் நிலையில், அபராதம் தொகை குறித்து , ஓட்டுநர் உரிமம் பெறுதல் என பல்வேறு அறிவுரைகளை வழங்கி அரசுக்கும் , பொதுமக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என அறிவுத்தினார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ 4.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.