திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு - வாங்க வாங்க என வரவேற்ற கி.வீரமணி

திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு - வாங்க வாங்க என வரவேற்ற கி.வீரமணி
Published on
Updated on
1 min read

ஈரோடு இடைத்தேர்தல் 

ஈரோடு இடைத்தேர்தல் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முழுமையான ஆதரவு தரப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது ட்வீட்டர் வழியாகவும் அறிக்கையும் வெளியீட்டு முழுமையான ஆதரவு தெரிவித்திருந்தார். 

மதவெறி தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும்  - கி.வீரமணி 

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன் 
@ikamalhaasan
அவர்கள் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மதச் சார்பற்ற ஜனநாயகத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரதுகட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த- மதவெறித் தீயை அணைக்க - அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும் வாழ்த்துகள் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் திராவிடர் கழக ஆசிரியர் கி.வீரமணி 

ரதி ராஜேந்திரன் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com