கன்னியாகுமரியில் இருந்து வந்த மருத்துவ அழகி!

இந்த ஆண்டின் மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு முன்னிருத்த இருப்பதாக அழகி நிஷோஜா பேட்டியளித்திருக்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து வந்த மருத்துவ அழகி!

அகில இந்திய அளவில் நடைபெற இருக்கும் மிஸ் அழகி போட்டிக்கு குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தேர்வாகியுள்ளார். இந்த அழகி போட்டியின் தேர்வு மூலம் இன்றைய காலத்து இளம்பெண்களில் மாநிறம்,கருப்பு தோல் கொண்ட பெண்களுக்களை உத்வேகப்படுத்த, தான் ஒர் முன்னுதாரணமாக கருதுவதாகவும், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெய்பூரில் நடைபெற உள்ள மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னிருத்த இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்க | நித்தம் ஒரு வானம்- அழகான காதல் கதையா? இல்லை பழைய வடையா?

ஆண்டுதோறும், இந்திய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 750 அழகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்தும் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வின்னர், ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றனர். ரன்னர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - தளவாய்புரத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஷோஜா தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | சமந்தாவின் கண் பறிக்கும் அழகில் மயங்கும் இளைஞர்கள்!

இவர் வரும் டிசம்பர் மாதம் ஜெய்பூரில் நடைபெறவுள்ள அகில இந்திய மிஸ் அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இன்று இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, "தன்னுடைய அழகி போட்டிக்கான தேர்வு தன்னை போன்று மாநிறம் சார்ந்த பெண்களுக்கு தன்னுடைய அழகி தேர்வு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மேலும், இன்று இருக்க கூடிய சமுக சூழலில் இருந்து வெளி உலகிற்கு பெண்கள் அதிக அளவில் வர வேண்டும். இதற்கு நான் ஒரு உதாரணமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சர்வதேச மிஸ் ஆரா அழகிப்போட்டி...இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?

மேலும், அகில இந்திய அளவில் நடைப்பெறும் மிஸ் அழிகி போட்டியில் தான் கலந்து கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னிறுத்துவதாகவும் பெருமைப்பட தெரிவித்துள்ளார். இவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.