ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு...!

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு...!

ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ல் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுதும் ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2017-ல் திருத்தம் செய்தது.

அந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்த பின், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‛பீட்டா' எனப்படும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதையும் படிக்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!

வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், தீா்ப்பு ஐல்லிக்கட்டு போட்டிக்கு எதிராகவே அமைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல் மாட்டுவண்டி பந்தயம் நடத்துவதற்காக மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டுவந்த சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுவிலும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.