ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி பரிந்துரை...

யூடியூப் வலைத்தளத்தில் ஆபாசமாக பேசி வரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.  
ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை  எடுக்க காவல் கண்காணிப்பாளருக்கு நீதிபதி பரிந்துரை...
Published on
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் ஜி.பி.முத்து ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது ஆபாசமாக பேசி வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.மேலும் அவர்களுக்கிடையே உள்ள   பிரச்னைகளை ஆபாச பேச்சுக்கள் மூலம், யூடியூப் பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு தங்களை இன்னும்   பிரபலபடுத்திக் கொள்வதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பரிந்துரை செய்துள்ளது

 தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் அளித்துள்ள புகாரில், ஆன்லைன் வகுப்பிற்காக குழந்தைகள் செல்போனை பயன்படுத்தி வரும் நிலையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா இருவரும்,  யூடியூப் சேனலில் பொதுத்தளத்தில் ஆபாசமாக பேசுவதும், அரைகுறை ஆடையுடன் தோன்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

 இந்த புகார்  முதல்வரின் தனிப்பிரிவுக்கு மட்டுமின்றி, இதற்கான நகல் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கும் அனுப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு,  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பரிந்துரை செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com