”சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை” - கண்ணீர் மல்க தெரிவித்த ஜெயராஜ் மகள் !

”சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை” - கண்ணீர் மல்க தெரிவித்த ஜெயராஜ் மகள் !

Published on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் இன்று வரை நீதிபதி நியமிக்கப்படவில்லை என ஜெயராஜின் மகள் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான் குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி, சாத்தான்குளம் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை எனவும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும்  கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு பல்வேறு நபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், தவறு செய்ய நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com