ஜெ. பல்கலை. அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது உறுதி- அமைச்சர் பொன்முடி!

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதில் தவறு இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜெ. பல்கலை. அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது உறுதி- அமைச்சர் பொன்முடி!

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உயர்கல்வி துறையில் கல்வியியல் துறை பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் நீதியரசன் வெங்கட்ராமன் தீர்ப்பின் அடிப்படையில் 30 ஆயிரம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பி.எட் கல்வித் தொகை 30 ஆயிரம் தான் உட்சகட்ட தொகை. ஆண்டிற்கு 30 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என்றார். தனியார் கல்வியியல் கல்லூரிகளில் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை, தேவைக்கு அதிகமாக பேராசிரியர்களும், ஊழியர்களும் இருந்ததால் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு 4 பணியாளரை மட்டுமே அதிமுக அரசு நியமித்தது. துணைவேந்தர், அவரின் உதவியாளர், டிரைவர், வாட்ச்மேன் மட்டுமே நியமிக்கப்பட்டனர். எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதில் தவறு இல்லை. அதற்கு பெருமைதான் என்றார். கிட்டத்தட்ட 100ஆண்டுகளாக இருக்ககூடிய பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என பெருமிதம் தெரிவித்தார்.