வங்ககடலில் உருவானது ஜாவத் புயல்!!.. தமிழ்நாட்டிற்கு மழை எப்படி இருக்கும்?

அந்தமான் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஜாவத் புயலாக வலுப்பெற்று, நாளை மறுநாள் ஒடிசா-ஆந்திரா கடலோரமாக கரையை கடக்கவுள்ளது. 

வங்ககடலில் உருவானது ஜாவத் புயல்!!.. தமிழ்நாட்டிற்கு மழை எப்படி இருக்கும்?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது. இந்த நிலையில் இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஜாவத் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

இது  ஒடிசா கடற்கரையோரம், பூரி அருகே நாளை கரையை கடக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் ஆந்திரா கடற்கரையோரங்களில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  

இதனிடையே கனமழை முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையோரம் 266 மீட்பு குழு, பேரிடர் மீட்பு விரைவு குழு, தீயணைப்பு துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திராவிலும் பலத்த எச்சரிக்கையுடன், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடுக்கி விட்டுள்ளார். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.