ஜல்லிக்கட்டுப் போட்டி.. முறைகேடு செய்து ரகளையில் ஈடுபட்ட மாட்டு உரிமையாளர்கள்.. தடியடி நடத்தி விரட்டி அடித்த காவல்துறை!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு உரிமையாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டி.. முறைகேடு செய்து ரகளையில் ஈடுபட்ட மாட்டு உரிமையாளர்கள்.. தடியடி நடத்தி விரட்டி அடித்த காவல்துறை!!

திருமங்கலம் அடுதத கரடிக்கல் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 600 காளைகளும்., 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். சிறந்த மாடு பிடி வீரர்களுக்கும் பிடிபடாக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

400 மாடுகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஒரே டோக்கனை நகல் எடுத்து மாடுகளை வரிசையில்  கொண்டு வர சிலர் முயற்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ஒரு தரப்பு, தங்கள் மாடுகளை வெளியில் அவிழ்த்து விட்டு ரகளையில் ஈடுபட்டது. இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.