ஊருக்கு ஒரு கவர்னர் வந்து விடுவார்கள் போல உள்ளது... அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!!!

ஊருக்கு ஒரு கவர்னர் வந்து விடுவார்கள் போல உள்ளது... அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அக்ஸிலியம் கல்லூரியின் 67-வது ஆண்டு விழா நடைபெற்றது.  இதில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர்  பொன்முடி, உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி கல்லூரியில் நிறைப்பணி எய்தி ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு, சாதனையாளர் விருதுகளையும், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் , தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா எனவும் அவர் சுயமரியாதை திருமணங்கள் சட்டமாக்கப்பட வேண்டும் எனக் கூறி அதை சட்டமாக்கியவர் எனவும் எந்த காலத்திலும் இந்தியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று மூன்று தீர்மானங்களை கொண்டு வந்த நிறைவேற்றியவர் அறிஞர் அண்ணா எனவும் பேசினார்.

அதைத்தான் இன்று திமுக ஆட்சி வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது எனவும் கவர்னர் பதவியே வேண்டாம் என்று அன்றைக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தெரிவித்து இருந்தார் எனவும் கூறினார்.  மேலும் அப்போது ஆட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்ட பொழுது அதற்கு டாக்டர் அம்பேத்கர் நான்கு அல்லது 5 மாநிலங்களை சேர்த்து ஒரு கவர்னர் இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார் எனவும் பேசும் போது குறிப்பிட்டு கூறினார்.

அதனோடு அம்பேத்கார் எங்காவது ஓரிடத்தில் பயர் என்ஜின் வைத்துக் கொண்டு விபத்து ஏற்படும்  இடங்களுக்கு அனுப்புவதை போல கவர்னர்களை அனுப்பலாம் என்று தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டார்
ஆனால் அதையெல்லாம் மீறி மாநிலத்திற்கு ஒரு கவர்னர் என்று வந்த பிறகு தற்பொழுது ஊருக்கு ஒரு கவர்னர் வந்து விடுவார்கள் போல் உள்ளது என்று துரைமுருகன் ஆவேசம் பொங்க பேசினார்.

இதையும் படிக்க:   தேர்தல் முடிந்தும் டோக்கனுடன் காத்திருக்கும் ஈரோடு மக்கள்...!!