உக்ரைன் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்க இயலாது - மா.சுப்பிரமணியன்!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்குவது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்க இயலாது - மா.சுப்பிரமணியன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அங்கு மருத்துவ படிப்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர் நாடு திரும்பினர். அப்போது உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆயிரத்து 896 தமிழக மாணவர்கள் சொந்த நாட்டில் மருத்துவம் படிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஏற்பாடு செய்வதாகவும் அல்லது அண்டை நாடுகளில் அதே கல்வி கட்டணத்தில் படிக்க ஏற்பாடு செய்வதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே உக்ரைன் மாணவர்களுக்கு இங்கு மருத்துவ படிப்பு தொடர சீட் வழங்க இயலாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உக்ரைன் மாணவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில் தான் உள்ளது எனவும், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்குவது என்பது மாநில அரசுக்கு சாத்தியம் இல்லை எனவும் கூறினார். மேலும், மத்திய அரசின் அனுமதியின்றி உக்ரைனில் படித்த மாணவர்களுக்கு இங்கு மருத்துவ படிப்பை தொடர சீட் வழங்க இயலாது என தெரிவித்தார்.