உரங்கள் தட்டுப்பாடு இருப்பது உண்மை... கனிமொழி எம்.பி. தகவல்...

உரத்தட்டுபாட்டினை போக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

உரங்கள் தட்டுப்பாடு இருப்பது உண்மை... கனிமொழி எம்.பி. தகவல்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பான மற்றும் முறையான பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உலகளவில் உரம் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால் உரங்கள் தட்டுப்பாடு இருப்பது உண்மை என்றும், உரத்தட்டுபாட்டினை போக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளதாகவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வேண்டும் என்று தொடர்ந்து திமுகவும், முதல்வரும் வலியுறுத்தி கொண்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

செயற்கையான உரத்தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதற்காக தான் அதற்கு என்று அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, மத்தியரசிடம் இருந்து வரும் உரங்கள் எங்கே போகிறது என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதையும் தாண்டி சில நேரங்களில் சில பிரச்சினைகள் இருக்கிறது. உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களின் விலை உலகளவில் உயர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் உரத்தட்டுபாடு இருப்பது உண்மை, இந்த தட்டுபாட்டினை போக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் தமிழக முதல்வரும் உரத்தட்டுபாட்டினை போக்க  மத்தியரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ள செய்தி கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திரசிடம் எடுத்துரைப்பது மட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு வேண்டும் என்று தொடர்ந்து திமுகவும், முதல்வரும் வலியுறுத்தி கொண்டு இருக்கிறார்கள் என்றார்.