"புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பும் காலம் இது" - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக மாணவர்கள் ஒன்று கூடி, குரல் எழுப்பி எதிர்க்கும் காலம் இது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியிருக்கிறார்.

"புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக குரல் எழுப்பும் காலம் இது" - பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக மாணவர்கள் ஒன்று கூடி, குரல் எழுப்பி எதிர்க்கும் காலம் இது எனறார். தமிழக அரசு நியமித்த  குழுவின் மூலம் இன்னும் ஒரு வருடத்தில் மாநில புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மனதை தளரவிடக்கூடாது என்றும் உடனடி தேர்வை  பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்திய  அன்பில் மகேஷ்,  மாணவர்களின் தற்கொலை முடிவை  தடுக்கும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என 
தெரிவித்தார்.  மேலும் பெற்றோர்களும் தங்களது விருப்பத்தை மாணவர்கள் மீது திணிக்காமல், அவர்களின் திறமையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.