பாமகவுக்கு இதே பொழப்புதான்... தேர்தல் முடிஞ்சதும் அவங்க வேலையை காட்டுறாங்க! புகழேந்தி காட்டம்...  

ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் தலைமையை விமர்சனம் செய்வதும் பாமகவுக்கு வாடிக்கையாகிவிட்டது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் சற்று அதிருப்தியடைந்தன. இந்த நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில், போளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்ற நிலையில், அங்குதான் அவர்களுக்குச் செல்வாக்கும் அதிகாரமும் உள்ளது என்றார்.

மேலும், அப்படி இருக்கும் நிலையில் பாமக இல்லை என்றால் அதிமுக 20 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்காது என்று பாமகவினர் கூறிவருவது முறையல்ல என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும், கூட்டணி வைப்பது, பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் மற்றவர்களை விமர்சிப்பது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமக தோல்வியைத் தழுவி விட்டதாகச் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்ற அவர்,  பாமக கோட்டையாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக முழுமையாகத் தோற்றுள்ளதால், தங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்க முடியாது என்றார்.