ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்கணும் அரசின் கடமை ஆளுநர் பேச்சு

ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்கணும் அரசின் கடமை ஆளுநர் பேச்சு

ஜன ஆரோக்கிய மேளா - முகாமில் ஆளுநர் ஆர் என் ரவி

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜன ஆரோக்கிய மேளா சார்பில் மருத்துவ முகாமினை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி துவக்கி வைத்து, உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது பார்மா தொழில் துறை ( Pharma industry ) உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. சில மாநிலங்கள் மருத்துவத்துறையில் நம் நாட்டில் சிறந்து விளங்குகின்றன. தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் மருத்துவத்துறை சிறப்பாக இல்லை. இந்த ஏற்றத்தாழ்வு இருக்கிறது. 

 நாட்டை பிரித்து பார்க்க கூடாது

நம் நாட்டை குடும்பமாக பார்க்கவேண்டும் பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது, சுகாதாரப் பிரச்சனை என்பது நாட்டின் பிரச்சனை.  நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டு நாட்டின் சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதே ஜனநாயக கடமை எனவும், தூய்மையின்மை பணக்காரர்களை விட ஏழைகளுக்கு அதிகமாக பாதிக்கிறது.

நம் நாடு முன்னேறி வருகிறது

ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை தூய்மையான குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் முக்கியம் எனவும் கட்டைகளை எரித்து சமைப்பதன் மூலம் அந்த புகை உடல் நலக் குறைபாடு ஏற்படுத்தும். சுகாதார விழிப்புணர்வு என்பது  ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தற்பொழுது நம் நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க தொடங்கியுள்ளது, இன்று மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியையாவது செயல்படும் வகையில் நம் நாடு முன்னேறி வருகிறது எனவும். தமிழகத்தில் 55க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன மேலும் கடந்த ஆண்டு 13 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரோக்கிய மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். ஆனால் நாம் ஒரு குடும்பமாக இருக்கிறோம் எனும் போது மொழி,  இனம் என அனைத்தையும் கடந்து நல்ல மருத்துவம் எல்லோருக்கும் ஒரே போல் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலையை எட்டி வருகிறது.

மேலும் படிக்க | அச்சு, காட்சி ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் எனது அன்பும், நன்றியும்! - சீமான் நெகிழ்ச்சி

ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும்

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற நிலையை விட அதிகமாகவே மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என தெரிவித்த அவர், குடும்பத்தில் ஒருவருக்கு நல்ல மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் அது குடும்பத்தில் அனைவருக்குமான பாதிப்பு தானே. அதே நாட்டிலும். எல்லா மாநில மக்களுக்கும், அங்குள்ள ஏழைகளுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என கூறினார். டார்வினியம் என்பது தகுதியுள்ளோருக்கு மட்டுமே எல்லாம் கிடைக்கும் என்பது. இது மேற்கத்திய மனநிலை. பணமில்லை என்றால் ஏழை என்றால் மருத்துவம் கிடைக்காது என்பது தான் இந்த மேற்கத்திய மனநிலை, இது முற்றிலும் தவறானது. மருத்துவர்களுக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது. மருத்துவர்கள் Generic medicine களையே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். அது தான் சரியானது.  மருத்துவர்களிடம் நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பார்மா சந்தையின் போட்டிகளுக்காக நோயாளிகளிடம் நிறுவனங்களின் பெயர்களை பரிந்துரைக்கக் கூடாது. Generic மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தி மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என ஆளுநர் ரவி கூறினார்.

மேலும் படிக்க | பாஜக நாட்டின் ஒற்றுமை நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி - துரை வைகோ
 |