சூதாட்ட தடை சட்ட மசோதாவின் 8 பக்க அறிக்கை...ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்?

சூதாட்ட தடை சட்ட மசோதாவின் 8 பக்க அறிக்கை...ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்?

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டத்துறை சார்பில் இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில், நேற்றையதினம் இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தில் மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை.... சீமான் ஆவேசம்!!!

இதையடுத்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டத்துறைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சட்டத்துறை சார்பில் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, இன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.