மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்: முதல் நாளிலே 15,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பதிவு!

மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம்: முதல் நாளிலே 15,000க்கும் மேற்பட்ட மாணவிகள் பதிவு!

அரசுப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதிவாய்ந்த மாணவிகள் உயர்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், வரும் 30ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் சான்றிதழ் பரிசோதனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய இந்நிகழ்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.