சொத்து வரி உயர்வை ஞாயப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சொத்து வரி உயர்வை முதலமைச்சர் ஞாயப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல என எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

சொத்து வரி உயர்வை ஞாயப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல  - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பேட்டி அளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை குற்றம்சாட்டினார்.

மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் அவர் விமர்சித்தார்.திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது சொத்து வரியா சொத்தை பறிக்கும் வரியா என கேள்வி எழுப்பிய மு.. கஸ்டாலின் தற்போது வரியை ஏற்றியது எந்த வகையில் நியாயம் என எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சொத்து வரி உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.