150 பேர் 200 பேரை மீட்டுவிட்டு அதை சாதனை என பிரதமர் சொல்வது வேதனையாக உள்ளது...திருமாவளவன்.!!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பது அரசின் தார்மீக கடமை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்,

150 பேர் 200 பேரை மீட்டுவிட்டு அதை சாதனை என பிரதமர் சொல்வது வேதனையாக உள்ளது...திருமாவளவன்.!!

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  

சனாதன சக்திகளை வீழ்த்தும் களத்தில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும் என்றார்.

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் தகவல்கள் வந்தது. இந்த தகவலலை அயலக வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பேசினோம் என கூறினார்.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் மொத்த பயண செலவை தமிழக அரசு ஏற்கும் என   தமிழக முதல்வர் அறிவித்தார் என கூறிய அவர், 150, 200 பேர் மீட்கப்பட்டு விட்டனர் என்று அதையே சாதனையாக பிரதமர்  கூறுவது வேதனையளிக்கிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது  ஒன்றிய அரசின் போக்காக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை சேதத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகமிக சொற்பமானது. முதல்வர் இது குறித்து மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.