கொரோனாவால் 3,499 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்த பரிதாபம்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 3 ஆயிரத்து 499 குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றால் 93 குழந்தைகள் தாய், தந்தை இரண்டு பேரையும் இழந்துள்ள தாகவும், இதுவரை 3 ஆயிரத்து 499 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இரண்டு பேரில் ஒருவரை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.