ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர வேறு தகுதியானவர்கள் இல்லையா? கேள்விகளை தொடுக்கு சிபிஎம்

ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர வேறு தகுதியானவர்கள்  இல்லையா? கேள்விகளை தொடுக்கு சிபிஎம்

பிபிசி ரெய்டு :

கடந்த இரு நாட்களாக பரபரப்பாக பேசப்படும் முக்கியமான விஷயம் என்னவெனில், பிபிசி அலுவலகத்தின் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படுகிறது. 50, 60 ஆண்டுகள் இந்த பிபிசி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் ரெய்டு நடத்தப்படவில்லை. ஏன் இப்போது நடத்தப்படுகிறது. 
இந்நிறுவனம், குஜராத்தில் நடைபெற்ற மோசமான நடவக்கையை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  அதில் தற்போது பிரதமராக இருக்கும் மோடி நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என குற்றம சாட்டியுள்ளனர். எனவே, இந்த ரெய்டு நடந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

நல்லவாய்ப்பு இந்தியாவில் இல்லை


கிண்டன் பர்க் நிறுவனம் இங்கு இல்லை. இங்கு இருந்தால் அதன் தலைவரை கைது செய்திருப்பார்கள். நல்லவேளையாக அது அமெரிக்காவில் உள்ளது. அதனாயின் ஊழல் முறைகேடு, கிட்டத்தட்ட மோடியினுடைய ஆட்சி அதானியுடைய  ஆட்சி என சொல்லக் கூடியது போல் நாட்டில் நடந்து வருகிறது. மோடி எந்த நாட்டிற்கு போனாலும், அதானியுடன் தான் கூடப்போவார். அங்கு தொழில் ஒப்பந்தம் போடுவார்.  கிட்டத்தட்ட அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது. 
ஆஸ்திதிரேலிய சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க அதானி ஒப்பந்தம் போட்டுள்ளார். நிலக்கரி எடுக்கப்பட்டு இந்தியாவிற்கு வருவதற்குள் இங்கு இருந்த 2.5சதவீத இறக்குமதி அதானிக்காக ரத்து செய்யபட்டது. அரசுக்கு வருமானம் போனாலும் பரவாயில்லை. அம்பானிக்கு வருமானம் போய்விடக் கூடாது என செயல்பட்டவர் நம்முடைய பிரதமர். கூட்டுப் பாராளுமன்றகுழு விசாரிக்க வேண்டுமென எதிர்கட்சகிள் தலைவர்கள் கேள்வி எழுப்பினால், எவ்வித பதிலும் பிரதமர் சொல்லவில்லை.  

வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா?

ஆளுநர்கள் புதிதாக போடப்பட்டுள்ளனர். சிலர் மாற்றப்பட்டள்ளனர். அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழிசை, எல்.கணேசன் ஏற்கனவே உள்ளனர். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர். ஆளுநர் பதவி என்பது பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசு போல் ஆகிவிட்டது. பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எனவே, இங்கு தலைமை தாங்குபவர்களுக்கு ஆளுநர் பதவி தருகின்றனர். 
ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா?. பொருளாதார நிபுணர்கள், வழக்கறிஞர்கள் பல அறிஞர்கள் உள்னர். அவர்களையெல்லாம் விட்டு விட்டு பாஜக தலைவர்களையே ஏன் ஆளுநகராக நியமிக்கின்றீர்கள் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஎம் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் எழுப்பினார்,