”அமித்ஷாவிற்கும் அண்ணாமலைக்கும் ஏதும் பிரச்சனையா....” டி.கே.எஸ். இளங்கோவன்!!!

”அமித்ஷாவிற்கும் அண்ணாமலைக்கும் ஏதும் பிரச்சனையா....” டி.கே.எஸ். இளங்கோவன்!!!

பிரதமர் தமிழ்நாடு வரும்போது மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் தான் பாதுகாப்பை வழங்குவார்கள்.  மத்திய அரசு காவல்துறை அதிகாரிகளை தாண்டி தமிழக காவல்துறையால் எதையும் செய்ய முடியாது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது பேசிய அவர் ;-

அக்கறை காட்டுவதாக:

காசி தமிழ் சங்கம் அல்ல சங்கமம் எனக் கூறிய இளங்கோவன் சங்கம் என்றால் காசியில் தமிழ் வளர்க்க வேண்டும் எனவும் அது ஒரு காலத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு யாத்திரை சென்றவர்கள் இருந்தார்கள் எனவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் தற்போது ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும், கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குமே மக்கள் அதிகமாக சென்று வருகிறார்களே தவிர காசிக்கு அதிகம் செல்லவில்லை எனக் கூறினார்.  மேலும் எப்போதும் எதையாவது ஒன்றை செய்து தமிழர்கள் மீது அக்கறை உள்ளதாக காட்டிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

அவமதிப்பு:

தொடர்ந்து பேசிய இளங்கோவன் ஆளுநர்  திட்டமிட்டு செயல்படுகிறார் எனவும் அவசர சட்டம் என்பது ஆளுநரே கையொப்பமிட்டு நிறைவேற்றப்படாத அரசு சட்டம் எனவும் தெரிவித்தார்.  மேலும் அவரே பிறப்பித்த ஒரு சட்டத்தை சட்டமன்றம் இயற்றி முன் வைத்துள்ள நிலையில் அதை அவரே அவமதித்துள்ளாரா என்ற எண்ணம் வருகிறது எனவும் கூறினார்.  

அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதனாலேயே ஆளுநர் மாற்றம் குறித்து நாம் வலியுறுத்தி உள்ளோம் என விளக்கமளித்தார் இளங்கோவன்.

பிரதமரின் பாதுகாப்பு:

பிரதமர் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் மத்திய அரசுதான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமித்ஷாவிற்கும் அண்ணாமலைக்கும் ஏதும் பிரச்சனையா என தெரியவில்லை எனவும் இளங்கோவன் கூறியுள்ளார்.  

மேலும் பிரதமர் வருகிறார் என்றால் டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர்களை தாண்டி தமிழக காவல்துறையால் எதையும் செய்ய முடியாது எனவும் பாதுகாப்பு பணிகள் சரியில்லை என்றால் அதனை மாற்றி சரி செய்து கொடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே அண்ணாமலை மத்திய அரசை தான் குற்றம் சாட்டுகிறாரே தவிர தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டுவதாக கருதவில்லை என கூறியுள்ளார் டி.கே.எஸ் இளங்கோவன்.

இதையும் படிக்க:   ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிரும் வைகோவின் வேண்டுகோளும்...!!!