தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பா? : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பா? : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் பரவலாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் கடந்த சில நாட்களாக பெய்து வந்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அதேசமயம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.