பள்ளி வாகனங்கள் இயக்கக் கூடிய நிலையில் இருக்கிறதா? : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.

பள்ளி வாகனங்கள் இயக்கக் கூடிய நிலையில் இருக்கிறதா? : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !!

பள்ளி  வாகனங்கள்  பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் இயக்கக்கூடிய நிலையில்  உள்ளதா என கடந்த 2012 முதல் ஆண்டுதோறும்என மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு தலைவர்களால் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 84 பள்ளிகளின் 391 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இன்று  விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மேற்சொன்ன குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டன. இன்று ஆய்வு செய்யப்பட்ட 300 பள்ளி வாகனங்களில் 285 வாகனங்கள் முழுத்தகுதி உடையதாக இருந்தது.15 வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்   மேகநாதரெட்டி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மனோகரன் ஆகியோர் பள்ளி வாகனங்களை விபத்தின்றி இயக்குதல் குறித்து உரிய அறிவுரை வழங்கினார்கள். பாதுகாப்பான வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய மீட்பு மற்றும் சீரமைப்பு செயல் விளக்கத்தை விருதுநகர், தீயணைப்புத் துறையினர் செய்து காண்பித்தனர்.

மதுரை வாசன் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்  நடத்தப்பட்டது.மேலும் கன்னிச்சேரி   ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களால்  அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அனைத்து ஓட்டுநர்களும் பயன்பெறும் வகையில் கோவிட்-9, தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தாத ஓட்டுநர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பபட்டது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்  பாஸ்கரன் செய்திருந்தார்.