நெருக்கடி கொடுக்கிறதா மாநகராட்சி? வியாபாரிகள் சந்தேகம்...!

நெருக்கடி கொடுக்கிறதா மாநகராட்சி? வியாபாரிகள் சந்தேகம்...!

காஞ்சிபுரத்தில் உள்ள ராஜாஜி காய்கறிச் சந்தைப் பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளுடன் சேறும் சகதியும் சேர்ந்து இருப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலைய சாலையில்  இயங்கி வரும் ராஜாஜி காய்கறி சந்தை யில் 150 கடைகள் உள்ளன. மக்கள் மட்டுமல்லாமல் சுற்று வட்டாரப் பகுதி வியாபாரிகளும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வது வழக்கம். கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், காய்கறிக் கழிவுகள் ஆகியவை நாள்தோறும் மாநகராட்சி லாரிகள் மூலம் அள்ளிச் செல்லப்பட்டு தூய்மைப் பணியும் மேற்கொள்ளபடும்.

ஆனால், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் நடைபெறாததால் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளதுடன் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. மேலும் தண்ணீர் தேங்கியதால் சேறும் சகதியுமாய் மாறி கால் வைக்கவே ஒப்பாத இடமாக மாறியுள்ளதுடன் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

ராஜாஜி காய்கறி சந்தைக்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறு கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதால், நெருக்கடி கொடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை அள்ளாமல் இருப்பதாக வியாபாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.