உரிய ஆதாரம் கொடுத்தால் திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாரா? ...நயினார் நாகேந்திரன் கேள்வி

தி.மு.க அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாரா? என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

உரிய ஆதாரம் கொடுத்தால் திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாரா? ...நயினார் நாகேந்திரன் கேள்வி

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்,  

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முத்துசரவணன் என்பவருக்கு சொந்தமான கடையில் நடந்த தீ விபத்து சம்பவம், சில தேச விரோதிகளால் நிகழ்த்தப்பட்ட சம்பவம். இதுபோன்ற சம்பவங்களால் புளியங்குடி பகுதிகளில் ஒரு பதட்டமான சூழல் தற்போது நிலவி வருகிறது என்றும்,

இதனை தணிக்க தமிழக அரசு உடனே இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான எதிர்வினைகளும்  இல்லை எனவும், தற்போது உள்ள திமுக அமைச்சர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

திமுக அமைச்சர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்தவிதமான ஆதாரமும் பாஜக தரப்பில் அளிக்கவில்லை என கேட்ட கேள்விக்கு, அனைத்தையும் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று மழுப்பலாக பதிலளித்தார்.