ஜூலை 11 ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழு சட்டவிரோதமானதா? - ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்!!

ஜூலை 11 ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழு சட்டவிரோதமானதா? - ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்!!

அதிமுகவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதை ஏற்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளரான அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு அறிவித்தது. ஆனால், இது சட்ட விரோதமானது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஈபிஎஸ் ஆதரவு எம்பிஸ்ரீ சி.வி.சண்முகம், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்றார்.   

கடந்த டிசம்பர் 1 ம் தேதி செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காததால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டது என்ற சிவி சண்முகம் கருத்தை ஏற்க முடியாது என்றார்.