இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா? கே.எஸ். அழகிரி கேள்வி !

இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா? கே.எஸ். அழகிரி கேள்வி !

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட தயாரா என தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ். அழகிரி சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி:

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயண பிரச்சாரம் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ். அழகிரி, அ தி மு க வை விட  நாங்கள் தான் பெரிய கட்சி என கூறும் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு  முன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : டெல்லி வந்த எகிப்து அதிபர்...எல்லைப் பகுதிகளில் "ஆபரேஷன் அலெர்ட்"...!

தொடர்ந்து, தனியாக கூட நிற்க வேண்டாம், அ தி மு க கூட்டணியோடு நிற்பதற்கு அண்ணாமலைக்கு தைரியம் இருக்கின்றதா எனவும் அழகிரி சவால் விடுத்தார்.