தேவையில்லாமல் விசாரணைகளை தள்ளி வைக்கக்கூடாது- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...

மாவட்ட நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க உத்தரவு தர முடியாது என்ற உயர்நீதிமன்றம், தேவையில்லாமல் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தேவையில்லாமல் விசாரணைகளை தள்ளி வைக்கக்கூடாது- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...
Published on
Updated on
1 min read

அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்திற்கு கொண்டு வர முடியாது என்பதற்காக தான் உச்ச நீதிமன்றமானது உயர்நீதிமன்றங்களாகவும், மாவட்டங்களுக்காக பிரத்யேக கீழமை நீதிமன்ரங்களாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், அதீத வழக்குகள் சிவில் வழக்குகளாகவே இருக்கின்றன. எண்டஹ் வழக்கும் இது சிறியது இது பெரியது என பிரித்து பார்க்க முடியாத நிலையில் இருக்கும் நீதித்துறை அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்குள் பல புது வழக்குகள் வந்து சேர்வதுண்டு. மேலும், பழைய வழக்குகளின் வாய்தாவும் பல வாய்தாக்களுடன் வரிசையில் நிற்பதும் நிதர்சணமான உண்மை.

இந்நிலையில், கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணையின்போது காலதமாதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கை காலதாமதம் ஆக்குவதற்காக வழக்கை தள்ளிவைக்க கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுபோன்று காலம் தாமதம் ஆக்குவதால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட  நிலுவையில் இருப்பதாக சுட்டிகாட்டி உள்ளார்.

கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றுன், அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலம்தாமதம் ஆக்குவது தெரிய வந்தால் மட்டுமே  உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com