கட்டாந்தரையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்பட முடியாது... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

கட்டடம் இல்லாமல் கட்டாந்தரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்பட முடியாது என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கட்டாந்தரையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்பட முடியாது... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

நெல்லை மாவட்டம் மனக்காவலம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசின் நிர்வாகத்தில் செயல்படும் மரபணு ஆய்வகம், சென்னையில் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை மறுநாள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், கட்டடம் இல்லாமல் கட்டாந்தரையில் கல்லூரி செயல்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.