முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய, வரும் 9-ம் தேதி வரை இடைக்கால தடை

பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய, வரும் 9-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய, வரும் 9-ம் தேதி வரை இடைக்கால தடை

தம்மை காதலிப்பதாக கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது ஏமாற்றி விட்டதாகவும், கருவுற்ற தம்மை மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய  காவலுஃதுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் தமது தரப்பு வாதத்தை கேட்காமல், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என, நடிகை சாந்தினி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்திருந்தார். இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய, வரும் 9-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. மேலும், பாலியல் புகார் அளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவை பட்டியலிட வேண்டும் என்றும், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின்  முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.