சமோசாவுக்குள் கிடந்த அரணைப் பல்லியை சாப்பிட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை...

ராமநாதபுரத்தில் சமோசாவுக்குள் கிடந்த அரணைப் பல்லியை சாப்பிட்ட சிறுவன் மயக்கம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமோசாவுக்குள் கிடந்த அரணைப் பல்லியை சாப்பிட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்த தில்லையேந்தல் பகுதியை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய 7 வயது மகன் வாசுதேவன் உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் வீடு திரும்பியுள் ளார். அப்போது ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு பேக்கரியில் சமோசா வாங்கியுள்ளார். இதனை வீட்டுக்கு  கொண்டு வந்த சிறுவன் சமோசாவுக்குள் அரணைப் பல்லி இருந்தது தெரியாமல் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் சிறுவனுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் சிகிச்சைகாக சிறுவனை கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைதொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேக்கரியில் ஊழியர்கள் அலட்சியமான உணவு பொருட்களை தயாரிப்பதால் இது போன்ற தவறுகள் நடப்பதாகவும், இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அந்த பேக்கரியில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.