இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... பிளஸ் டூ துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தகவல்...
பிளஸ் டூ துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செய்த மேல்முறையீடு மனு இன்று உயர்நீமன்றத்தில் விசாரணை வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று அதன் தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. எனவே தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறை சற்று தளர்ந்துள்ளதாக கருதுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழககத்தில் பயிலும் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள TECNOLRX - CYBER CLUB என்று விழிப்புணர்வு அமைப்பின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைவதற்கான அடித்தளம் தான்...தனிநீதிபதி தீர்ப்பு!
இதில் பங்கேற்ற அமைச்சர் மனோதங்கராஜ், சட்டக் கல்லூரி மாணவர்களின் indian STUDENTS LAW REVIEW என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் குற்றவியல் வல்லுநர்கள் தேவைப்படுவதாக கூறினார்.
தமிழ்நாட்டில் திங்கட்கிழமை மட்டும் 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்த நிலையில் செவ்வாய்க்கிழை ஐந்து மாவட்டங்களில் சதத்தைக் கடந்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், திங்கட்கிழமையான நேற்று 7 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்திருந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைவதற்கான அடித்தளம் தான்...தனிநீதிபதி தீர்ப்பு!
அதன்படி, ஈரோட்டில் 103 புள்ளி 28 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவைத் தொட்டுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 புள்ளி 10 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை நகரில் 102 புள்ளி 20 டிகிரி ஃபாரன்ஹீட்டும், திருச்சியில் 100 புள்ளி 22 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாக 100, 101 என்ற பெரனிட் வெயில் அடித்து வந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.28°F வெயில் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புற சாலைகளை மேம்படுத்த முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் எனும் புதிய திட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தை போலவே, முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் படி, நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைவதற்கான அடித்தளம் தான்...தனிநீதிபதி தீர்ப்பு!
நடப்பாண்டில் இரண்டாயிரத்து 300 கோடி மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்த நீதிபதி, ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட எதிர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க : தனிநீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை...ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பேட்டி!
இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவும், அதுவரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை விதிக்குமாறும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.