குழந்தைகளுக்கு பரவி வரும் காய்ச்சல்..! அலட்சியம் வேண்டாம்..!

குழந்தைகளுக்கு பரவி வரும் காய்ச்சல்..! அலட்சியம் வேண்டாம்..!

தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. 

இன்ஃப்ளூவன்சா காய்ச்சல்:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக H1N1 எனப்படும் இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தக் காய்ச்சலால் குறிப்பாக 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 

117 குழந்தைகள்:

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில்  மலேரியா, டெங்கு, உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளான 117 குழந்தைகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு காய்ச்சல்..! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ்

பரிசோதனை முகாம்:

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்  அலட்சியம் காட்டாமல்  உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வருமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் 100 :

சென்னையில் மட்டும் 100 முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாம்களில் சளி, இருமல், காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும், முகாம்களில் 476 நடமாடும் மருத்துவக் குழுவினர் ஈடுபடுவார்கள் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை?:

பள்ளி குழந்தைகளிடம் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை போன்று தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், 3 நாட்களில் குணப்படுத்தக்கூடிய காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.