இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித் துறை தளர்ந்துள்ளது - மனோ தங்கராஜ்!

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித் துறை தளர்ந்துள்ளது - மனோ தங்கராஜ்!

Published on

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறை சற்று தளர்ந்துள்ளதாக கருதுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழககத்தில் பயிலும் குற்றவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள  TECNOLRX - CYBER CLUB  என்று விழிப்புணர்வு அமைப்பின் துவக்க  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் மனோதங்கராஜ், சட்டக் கல்லூரி மாணவர்களின் indian STUDENTS LAW REVIEW என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் குற்றவியல் வல்லுநர்கள் தேவைப்படுவதாக கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com