கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதி...

கேரளாவில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்காக கன்னியாகுமரி வரும் நபர்களிடம் கொரோனா சான்றிதழ் இல்லை என்றால், ஆர்.டி, பி.சி.ஆர். பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் அனுமதி...

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இன்று மற்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக, கேரள எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் தமிழக - கேரள  எல்லையான களியக்காவிளை சோதனை சாவ டியில் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சான்றிதழ் இல்லை என்றால் ஆர். டி., பி.சி.ஆர். பரிசோதனைக்கு பிறகே கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களிடம் அதிகாரிகள் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.