அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

தமிழ்நாட்டில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   

தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக்கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் தொடங்கி வைத்து பேசினார்.  ஆலோசனைக் கூட்டம் முடிவு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருவதால், நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மத்துவமனைகளிலும், 100 சதவீதம் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவித்தார்.  

மேலும் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு இல்லை என்று கூறிய அவர், நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் அதற்காகவே இந்த முன்னேற்பாடு எனவும் கூறினார்.

இதையும் படிக்க:    எடப்பாடி பழனிச்சாமி  கையில் இனி அதிமுக…! பெரும் பங்கு வகிக்கும் மூன்று மாஜிக்கள்..!