சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..? மக்களின் அலட்சியம் காரணமா..?

தமிழகத்தில் தற்போது எட்டாயிரத்து 41 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..? மக்களின் அலட்சியம் காரணமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே 800-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நேற்று ஒருநாளில் 724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 30 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது எட்டாயிரத்து 41 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 743 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 946 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,  வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக இருந்த நிலையில் நேற்று 131 ஆக அதிகரித்துள்ளது.