குடும்ப தலைவிக்கு ஊக்கத்தொகை.. புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குடும்ப தலைவிக்கு ஊக்கத்தொகை.. புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 இரு தவணைகளில், ரூபாய் 2000 வீதம் மே 21 மற்றும் ஜூன் 21 மாதங்களில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நிவாரண தொகை ரூபாய் 2000 முதல் 14 மளிகை பொருட்கள் வழங்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண தொகை மாற்று பொருட்கள் அளிக்கப்பட்டன.

இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அவரின் அறிவிப்பின் விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். புதிதாக திருமணம் செய்தோர், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்