சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு : பொது மக்கள் குற்றச்சாட்டு

சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரிப்பு : பொது மக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடத்தூரில் சோதனைச்சாவடி பயன்பாட்டில் இல்லாததால் கனிமவள கடத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கடத்தூரில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் இங்கு கனிம வள கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவை குறைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது  இந்த சோதனைச்சாவடி பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதி ஆற்றில் மணல்  கடத்தி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

அதிகரித்து வரும் கனிம வள கடத்தலை தடுக்க, அப்பகுதியில் மீண்டும் சோதனைச்சாவடியை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.