செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியைப் பொறுத்தவரை சுமார் 10-ரூபாய் முதல் 60-ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதே போல் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 325- ரூபாயில் இருந்து 375-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395- ரூபாயில் இருந்து 455-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தியுள்ளனர்.