சென்னையில் 9237 தெருக்களில் நோய் பரவல் அதிகம் :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !!

தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 9237 தெருக்களில் நோய் பரவல் அதிகம் :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !!

சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் நோய் பரவல் அதிகமாக உள்ள போதிலும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொங்கல் விடுமுறைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற மக்களால், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் நோய்த்தொற்று அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், வரும் நாட்களிலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறிய அமைச்சர், சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் நோய் பரவல் உள்ள போதிலும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், இந்தியாவில் போலியோவே இல்லை என்னும் நிலை உருவாகியுள்ள சூழலில், போலியோ தடுப்பூசி முகாம் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், எந்தவொரு பாதிப்பும் இருக்காது எனக் கூறினார்.