வருமான வரி சோதனை ஒரு கண் துடைப்பு.... சீமான்!!

வருமான வரி சோதனை ஒரு கண் துடைப்பு.... சீமான்!!

தன்னுடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தால் அவர்கள் தான் தனக்கு பணம் தரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐடி ரெய்டு குறித்து விமர்சித்தார்.

Income tax raid: जब्त रकम का क्या होता है, जानिए छापेमारी के दौरान Income  Tax Department के सामने क्या होती हैं चुनौतियां - Income tax raid What  happens to properties confiscated in

வருமான வரி சோதனை ஒரு கண் துடைப்பு எனக் குற்றஞ்சாட்டிய சீமான் சோதனை நடத்த விடாமல் அதிகாரிகளை தடுப்பது ஏன் என கேள்வியெழுப்பினார்.  மேலும் அவர் வருமான வரி சோதனையில் வெளிப்படை தன்மை இல்லை  எனக் கூறிய அவர் அவருடைய வீடில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டுமானால் அவர்கள் தான் பணம் தர வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

இதையும் படிக்க:   திசை திருப்பவே இந்த வருமான வரித்துறை சோதனை...!!!