சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 13.80 கோடி மதிப்பில் 'Q' வரிசை வளாகம் திறப்பு...!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 13.80 கோடி மதிப்பில் 'Q' வரிசை வளாகம் திறப்பு...!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்களுக்கான கியூ வரிசை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இதையும் படிக்க : அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி...திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய வரிசை வளாகம் அமைக்க முடிவு செய்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திருக்கோயில் நிதியிலிருந்து ரூ. 13.80 கோடி மதிப்பில் தொடங்கிய கியூ வரிசை வளாகம் அமைக்கும் பணிகள் பல்வேறு வசதிகளுடன் நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில், ஆட்சியர் பிரதீப் குமார், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், கோயில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.