புதிய நாடாளுமன்ற திறப்பு விழா : இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..! - சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

' மதசார்பற்ற நாடு' என்பதற்கு விரோதமாக மத தலைவர்களை கொண்டு திறப்பு விழாவை மத விழாவாக மாற்றி இருக்கிறார்கள்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா :  இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி..!  -  சிபிஐஎம் மாநிலச் செயலாளர்   கே. பாலகிருஷ்ணன்.

மகாத்மா காந்தியை கொன்ற சாவார்க்கர் நினைவு தினத்தில் நாடாளுமன்ற திறப்பு நிகழ்வு நடப்பது நாட்டின் நலனுக்கு விரோதமானது  என சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் "உழைப்போரெல்லாம் தலை" என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி மற்றும் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது,...

" நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை இந்திய நாடாளுமன்றத்தில் முக்கியமாக இருக்கிற 20 எதிர்கட்சிகள் புறக்கணிப்போம் என்று அறிவித்தும் ஒரு ஜனநாயக பண்பில்லாமல், இன்று திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.  எதிர்கட்சிகளின் கேள்வி எல்லாம் ,  குடியரசு தலைவரை விழாவிற்கு கூட அழைக்காமல்  நாடாளுமன்றத்தை  திறப்பது என்ன ஜனநாயகம்...? .  இது அரசியல் சாசன மீர்வு என்று கூறியபோதும் அதை பற்றி கவலைப்படாமல் இந்த திறப்பு விழா நடைபெற்று உள்ளது. மதசார்பற்ற நாடு என்பதற்கு விரோதமாக மத தலைவர்களை கொண்டு திறப்பு விழாவை மத விழாவாக மாற்றி இருக்கிறார்கள்.

" மகாத்மா காந்தியை கொன்ற சாவார்க்கர் நினைவு தினத்தில் நாடாளுமன்ற திறப்பு நிகழ்வு நடப்பது நாட்டின் நலனுக்கு விரோதமானது, நாட்டின் விடுதலைக்கு விரோதமானது என்று எடுத்து கூறியும் அதை பற்றி கவலைபடாமல் இந்த விழா நடைபெற்று இருக்கிறது. இந்திய நாடாளுமன்ற திறப்பு விழா இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைத்திருக்கிறது. "

ஆளுநர் ரவி மோசமான சட்ட விலும்பங்களை எல்லாம் மாறி மாறி பேசி வருகிறார். சில தினங்கங்களுக்கு முன்னாள் சிதம்பரத்தில் உள்ள தீக்ஷதர்களை அரசு பழி வாங்குகிறது. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதினேன் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார் எனக் கூறினார். .  

தொடர்ந்து பேசிய அவர், " இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து வந்த அதிகாரி ஆய்வு செய்துவிட்டு முதலில் இரு விரல் சோதனை நடத்தப்பட வில்லை என்றார். அடுத்த நாள் இரு விரல் சோதனை நடந்து இருக்கிறது என்று கூறி, ஆளுநர் சொன்னது உண்மை என்று கூறி உள்ளார். இது அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கி இருப்பதை காட்டுகிறது. குழந்தை திருமணம் நடத்துகிறார்கள். அதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்தால் அவர்களை கண்டிகிறார் ஆளுநர் ரவி ",  என சாடினார்.  

அதோடு,  ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வழக்கு தொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுகொள்வதாகக் குறிப்பிட்டார். 

தமிழ்நாடு பாரம்பரதிற்கும் செங்கோல்க்கும் சம்பந்தம் இல்லை. இது சோழகளின் அடக்கு முறை கருவி தான்.இது மக்களை அடக்கும் கருவி தான். இதனை அங்கு வைப்பதால் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படாது. இது மத அடிப்படையிலான பிரதிபலிப்பு தான்.  பாஜக ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கோட்பாட்டை பிரதிபலிக்கிறது. அதனால் தான் நாடாளுமன்ற கல்வெட்டிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    |  சவப்பெட்டியுடன் ஒப்பிடப்பட்ட நாடாளுமன்றம்: வெடிக்கும் புதிய சர்ச்சை!

" ஸ்டான்லி மருத்துவமனை உட்பட 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை மாணவர் சேர்க்கை நிறுத்துவது தவறானது.  தமிழ்நாட்டில் அதிக பல்கலைக்கழகங்கள் மருத்துவக்கல்லூரிகள் இருக்கிறது என்பதால் தான் குறை கூறி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை தடுப்பது  அநாகரிகமான செயல். " என்றார்.

மேலும், ஆதினங்களின் சொத்துகளை அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

இதையும் படிக்க    | "புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில்" - பிரதமர் பெருமிதம்