காவல்துறை பதிவேட்டில் பாராட்டி புகழ்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

காவல்துறை பதிவேட்டில் பாராட்டி புகழ்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
Published on: 
Updated on: 
1 min read

மக்கள் போற்றும் வகையில் காவல்துறையினரின் பணி அமைந்திருப்பதாக  காவல்துறை பதிவேட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் துறையில் முதல்வர்:

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று டிஜிபி அலுவலகத்திற்கு வருகை புரிந்து உங்கள் துறையில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். 

பின்னர் சுற்றுசூழல் நலனை முன்னிறுத்தும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் தன்னுடைய வாழ்த்துக்களை எழுதி உள்ளார். 

அதில், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகமே சமூக நீதி, சமத்துவம் கடைப்பிடிப்பதை பறைசாற்றுகிறது என தெரிவித்துள்ளார். 

மக்கள் போற்றும் வகையில் பணியாற்றி வரும் காவல்துறை டிஜிபி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அவர்களுக்கு துணை நிற்கும் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டு கையெழுத் திட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com